திருநெல்வேலி மாவட்ட  காவல்துறையினர் மற்றும் குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் மற்றும் குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து மாவட்ட காவல்துறை மற்றும் தியாகராஜநகர் ஆர்த்திஸ் மருத்துவமனை இணைந்து காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருகளுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன். உத்தரவின்படி, நடைபெற்ற காவலர் மருத்துவ முகாமில் தோல் அலர்ஜி, தேமல், படர்தாமரை, முகப்பரு, பொடுகு பிரச்சனை, முடி உதிர்தல் சிறப்பு சிகிச்சை, முகப்பொலிவு சிகிச்சை, கரும்புள்ளி, மச்சம், மரு – அகற்றுதல், வெண்புள்ளி, கால் ஆணி சிகிச்சை, சொரியாசிஸ், பெண்களுக்கான பால்வினை நோய்கள், பொதுநலம், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், மூளை நரம்பியல், இதயம் மற்றும் சிறுநீரக நோய்கள், மஞ்சள் காமாலை, தைராய்டு, நுரையீரல் போன்ற பரிசோதனைகளில் காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஆகியோர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் கலந்துகொண்டு சிறப்பான முறையில் நடைபெற்றது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )