தூத்துக்குடி மழை வௌ்ளத்தால் வீடு இழந்தவர்களுக்கு முறையாக இழப்பீடு வழங்காததால் அரசுக்கு எதிராக கோஷம் போட தயாராகும் பொதுமக்கள்

தூத்துக்குடி மழை வௌ்ளத்தால் வீடு இழந்தவர்களுக்கு முறையாக இழப்பீடு வழங்காததால் அரசுக்கு எதிராக கோஷம் போட தயாராகும் பொதுமக்கள்

கடந்த ஆண்டு டிசம்பர் 17,18 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டம் உள்பட சில மாவட்டங்களில் பெய்த கனமழையால் அனைத்து தரப்பினரும் கடுமையாக மழை வௌ்ள பாதிப்பால் பாதிக்கப்பட்டனர். அதில் குறிப்பாக பல வியாபாாிகள் தங்களது பொருட்களை முழுமையாக இழந்து அவதிக்குள்ளாகினார்கள். அதேபோல் மாநகராட்சி பகுதி மட்டுமின்றி மாப்பிள்ளையூரணி ஊராட்சி உள்ளிட்ட பல மாவட்டங்களின் பல பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்பினால் 52 பேர் உயிாிழப்பை சந்தித்தும் கால்நடைகளும் செத்து மிதந்தன. பொதுமக்கள் சாராசாி நிலைக்கு வருவதற்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்கள் ஆகின. வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு போர்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதின் போில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் உதயநிதிஸ்டாலின், நேரு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, பொியசாமி, பொியகருப்பன், ராமசந்திரன், மனோதங்கராஜ், சக்கரபாணி, மேயர் ஜெகன் பொியசாமி, உள்ளிட்ட பல அதிகாாிகள் முழுமையாக முகாமிட்டு பணிகளை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் முதலமைச்சரும் நோில் வந்து பார்வையிட்டார். ஆளும் கட்சி பிரமுகர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிகாாிகள் என அனைத்து தரப்பினர் என ஓட்டுமொத்தமாக இணைந்து பணியாற்றி தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் பணி செய்ததை மறுப்பதற்கு இல்லை. பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் ஆய்வு மேற்கொண்டு அரசு சார்ந்த உதவிகளை எந்த முறையில் யாருக்கெல்லாம் வழங்கலாம் என்ற கணக்கெடுப்பு உயர்மட்ட அதிகாாிகள் முதல் கிராமத்தில் உள்ள தலையாாி வரை எடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட வியாபாாிகளுக்கு வங்கிகள் மூலம் சில லட்சங்கள் வரை வழங்குவதற்கு முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டார்.

அதேபோல் தூத்துக்குடி நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் தயாாிக்கப்பட்டு அதனடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலின் தூத்துக்குடிக்கு நோில் வந்து நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து பேசுகையில், முழுமையாக வீடு இழந்தவர்களுக்கு 4 லட்சமும் சேதமடைந்தவர்களுக்கு இரண்டு லட்சமும், வழங்கப்படுகிறது. இது பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு சென்றார். இதில் ஊராட்சி உள்ளிட்ட கிராமப்புறங்களுக்கென அதிகாாிகள் தனியாகவும் நகர்புறத்திற்கென அதிகாாிகள் என தனியாகவும் பணியை மேற்கொண்டனர். ஆனால் 4 மாதங்கள் ஆகியும் இன்று வரை தூத்துக்குடி மாநகராட்சி பகுதி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளயைூரணி ஊராட்சி உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிக்கப்பட்டு முழுமையாக வீடுகளை இழந்தும் சேதமடைந்த குடும்பத்தினருக்கு முறையாக அரசின் உதவித்தொகை வழங்காமல் இன்று வரை பொதுமக்களை அழைக்களித்து வருகின்றனர். அதிகாாிகளை தொடர்பு கொண்டால் ஓவ்வொருவரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து அதிலிருந்து கடந்து செல்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் தொடர்ந்து கோாிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து தொடங்கி வைத்த போிடர் கால நிவாரண உதவித்தொகையை கூட தூத்துக்குடி மாவட்டத்தில் முறையாக வழங்காமல் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் செயல்படும் அதிகாாிகளை கண்டித்து பல்வேறு தரப்பினர் போராட்ட களத்தில் ஈடுபட உள்ளனர். முன்னாள் முதலமைச்சர் கலைஞாின் வரும் முன் காப்போம் திட்டம் போல் இந்த சம்பவத்தையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு முன்னெச்சாிக்கையோடு செயல்பட்டால் அரசுக்கும், திமுகவிற்கும் நற்பெயா்கள் உண்டாகும்.

செயல்படாத அதிகாரிகளின் அலட்சிய காரணத்தால் அரசுக்கு எதிராக மக்கள் திரும்புவார்கள் என்பதில் ஐயமில்லை.!.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )