ஜெ.வின் கோடநாடு எஸ்டேட் அரசுடமையாகுமா?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பில், சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட்டையும் பறிமுதல் செய்ய அறிவுறுத்தி உள்ளது. இதனால் இந்த எஸ்டேட் அரசுடமையாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது கோடநாடு. ஜெயலலிதா முதன்முறையாக முதல்வராக பொறுப்பேற்ற காலத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கோடநாடு காட்சிமுனைக்கு அருகே கடந்த 1992-ம் ஆண்டு சுமார் 900 ஏக்கர் பரப்பில் கோடநாடு எஸ்டேட் ரூ.17 கோடிக்கு வாங்கப்பட்டது.
சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் இயக்குநர்க ளாக உள்ளனர். அதன் பின்னர் இந்த எஸ்டேட் 1,600 ஏக்க ராக விரிவாக்கப்பட்டது. ஜெய லலிதாவுக்கு இதில் 10 சதவீத பங்கு மட்டுமே உள்ளது. ஜெய லலிதா இங்கு பல முறை தங்கி ஓய்வு எடுத்துள்ளார். சுமார் 5,000 சதுர அடி பரப்பி லான பிரம் மாண்ட பங்களா, ஹெலிகாப்டர் தளம், படகு குழாம், தேயிலை தொழிற்சாலை, எஸ்டேட்டை சுற்றிப் பார்க்க பேட்டரி கார்கள் உள்ளன.
11 நுழைவு வாயில்கள்
இந்த எஸ்டேட்டை வாங்கி யதில் இருந்து கோடநாடு பகுதி யில் கடும் கெடுபிடிகள் அரங்கேற் றப்பட்டன. சாமானிய மக்கள் உள்ளே நுழையாத வகையில் எஸ் டேட்டில் 11 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த எஸ்டேட்டில் 500 சதுர மீட்டர் அளவில் இருந்த குடியிருப்பு 99 அறைகள் கொண்ட பிரம்மாண்ட பங்களாவாக புதுப் பிக்கப்பட்டது. இந்த பங்களா வெளியில் இருந்து பார்க்க முடியாதவாறு கட்டப்பட்டது.
விதி மீறல் புகார்
நீலகிரி மாவட்ட கட்டிட விதி யான மாஸ்டர் பிளான் சட்டத்தை மீறியதாக புகார் எழுந்தது. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், கட்டிடங்களை முறைப்படுத்தவும் மாஸ்டர் பிளான் சட்டத்தை இயற்றிய ஜெயலலிதாவே அந்த சட்டத்தை மீறியதாக சர்ச்சை கிளம்பியது .
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், கோட நாடு எஸ்டேட் உள்ளிட்ட சொத்துகள் இணைக்கப்பட்டன. தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்ததால், கோடநாடு எஸ்டேட் அரசுடமையாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு தேயிலை தோட்ட கழகத்துடன் கோடநாடு எஸ்டேட்டையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீலகிரி மாவட்ட செயலாளர் ஆர்.பத்ரி கூறும்போது, ‘இந்த எஸ்டேட்டில் சுமார் 500 தொழி லாளர்கள் பணிபுரிகின்றனர். இவர் களின் பணியை பாதுகாக்கும் வகையில், இவர்களுக்கு டான்டீ யில் பணி வழங்க வேண்டும்” என்றார்.
நன்றி : தி இந்து தமிழ்