Breaking News
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்
புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இதற்கிடையே, சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு இயக்குனர்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டில் இருந்து 5 ஆண்டாக நீட்டிப்பதற்கான 2 அவசர சட்டங்களை மத்திய அரசு  பிறப்பித்தது. இது பெரும் அரசியல் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளது.
இந்தநிலையில்  டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11.30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.