தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு தூத்துக்குடியை சேர்ந்த வீரர்கள் தேர்வு

தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு தூத்துக்குடியை சேர்ந்த வீரர்கள் தேர்வு

தூத்துக்குடி கோஜுரியு வேர்ல்ட் கராத்தே டூ சோபுக்காய் இந்தியா சார்பாக அகில இந்திய அளவிலான கராத்தே தேர்வு கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வைத்து நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் சிவசங்கரி, ஆண்டோ ஜெரால்ட், ஆகாஷ், சக்தி பாலன், கிருஷ்ணசாமி, சபரி கிரி, பிரின்சோ, பிரணவ், ரஃபேல் ஆண்டனி , ரோஹித் ஹரி வர்ஷா ஆகியோர் பங்கேற்று தேர்ச்சி பெற்றனர்.

தேர்ச்சி சான்றிதழை கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ரென்ஷி சுரேஷ்குமார் வழங்கினார். இம்மானவர்கள் கோவாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களை தூத்துக்குடி மாவட்ட சோபுக்காய் கோஜூரியு கராத்தே பள்ளியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சென்சாய் செந்தில் மாவட்ட செயலாளர் சென்சாய் முத்துராஜா மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )