
நெல்லையில் மாயமான காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுப்பு
திருநெல்வேலி மாவட்டம் கரைச்சுத்து புதுரைச் சேர்ந்த காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங். இவரை, கடந்த மே 2 ஆம் தேதி முதல் காணவில்லை என ஜெயக்குமாரின் மகன் கருத்தையா ஜாஃப்ரின் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.மேலும், கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி 7.45 மணி அளவில் இவரின் செல்போன் இயங்கவில்லை என்று கூறப்படுகிறது.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை ஜெயக்குமார் தனசிங்கை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், உவரி அருகே கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் தனசிங், உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவரை கொலை செய்தது யார் என காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, அவரின் கைப்படவே, எழுதிய கடிதத்தில், சிலர் தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்று எழுதியுள்ளார். இதற்கிடையில், இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது