கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் – பொதுமக்களும், மீனவர்களும் பாதுகாப்பாக இருக்க மீன்வளத்துறை எச்சரிக்கை

கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் – பொதுமக்களும், மீனவர்களும் பாதுகாப்பாக இருக்க மீன்வளத்துறை எச்சரிக்கை

தென்தமிழக கடல் பகுதியில் 1½ மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்புவதால் பொதுமக்கள் கடற்கரை செல்வதையும், கடற்கரை பூங்காக்களில் நடமாடுவதையும், கடலோர மீனவ கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தெற்கு ஆந்திரா கடலோர பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 58 கிலோ மீட்டர் வேகத்திலும், இடை யிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் | எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தென் தமிழக கடல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதன் காரணமாக இன்று (04/05/2024) சனிக்கிழமை அன்று காலை 2.30 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணி வரை கடல் அலைகள் அரை மீட்டர் முதல் 1½ மீட்டர் உயரம் வரை எழும்.

இதனால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வதையும், கடற்கரை பூங்காக்களில் நடமாடுவதையும், கடலோர மீனவ கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மீனவர்கள் தங்கள் படகுகளை கடற்கரையில் இருந்து பாதுகாப்பான தூரத்தில் படகுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவ கிராமங்களுக்கு சீற்றம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலுக்கு செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும். கடற்கரையோர மீனவ மக்கள் பாதுகாப்பாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என்றும் அனைத்து மீனவ கிராமங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )