குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்கை.!.  தமிழ்நாடு காவல்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்கை.!. தமிழ்நாடு காவல்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் அலட்சியத்தால் குற்றச்சம்பவங்கள் பெருகி வருவதாக பல்வேறு குற்றசாட்டு எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாநகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது தென்பாகம் காவல் நிலையம். இந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதுகுறித்து புகார் மனுவாகவோ அல்லது போன் மூலமாகவும் புகார் அளித்தாலும் எவ்வித முறையான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இங்கு பணியாற்றும் போலீசார் அலட்சியம் காட்டுவதால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. புகார் அளித்தால் எதிர்மனுதாரருக்கு சாதகமாக பேசி புகார் மனுதாரரை மிரட்டி அனுப்பி வைப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இங்கு வரக்கூடிய புகார்களை கட்டப்பஞ்சாயத்து செய்து ஒருதலை பட்சமாக செயல்பட்டு பேசி அனுப்பி வைப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த காவல் நிலையத்தின் எல்லையில் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாகவும், இதை காவல்துறையினர் கண்டும் காணாதபோல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேற்படி காவல் நிலையத்திற்கு போன் மூலமாக ரகசியமாக தகவல் அளித்தால் புகார் அளித்த நபர்களை காட்டிக் கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக சில நேரங்களில் கொலைகளும் நடந்தேறி வருகிறது.

பைக் மற்றும் திருட்டு சம்பவங்களும், வழிப்பறி சம்பவங்களும், போதை பொருட்கள் விற்பனை போன்ற தகவல்களை இந்த காவல் நிலையத்தில் பணியில் உள்ள காவலர்கள் மற்றும் தனிப்பிரிவு காவலர்களிடம் ரகசிய தகவல் அளிப்பதற்காக பொதுமக்களோ, சமூக ஆர்வலர்களோ தொடர்பு கொண்டால் எந்த சூழ்நிலையும் போனை எடுப்பதில்லை என கூறப்படுகிறது.

இதே நிலை நீடித்தால் தூத்துக்குடி மாநகரம் மத்தியில் அமைந்துள்ள பகுதிகளில் குற்ற சம்பவங்கள் மேலும் அதிகரித்து சட்ட ஒழுங்கு சீர்கேடு நிலை உருவாகும் சூழல் ஏற்படும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

எனவே, தமிழ்நாடு காவல்துறையும் மற்றும் மாவட்ட காவல்துறையும் இதுபோன்று அலட்சியமாக செயல்படும் தென் பாகம் காவல் நிலையத்தில் நேரடியாக ஆய்வு செய்து அலட்சியமாக செயல்பட்டு வரும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, குற்றச்சம்பவங்கள் பெருகாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், அதைத் தடுக்க மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் முனைப்புடன் செயல்பட்டு வரும் வேளையில், இது போன்ற சம்பவங்களால் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உருவாகும் என்பதில் ஐயமில்லை.!.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (2 )