
ஏரல் அருகே மதுபோதையில் குளத்து நீரில் மூழ்கி நண்பர்கள் இருவர் உயிரிழப்பு
தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி (25). கீழ சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் ஏசுபாலன் (26) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த பிரகாஷ் (25), முருகேசன் (25) ஆகியோருடன் தங்களது நண்பரான பண்டாரவிளை கிராமத்தைச் சேர்ந்த மாரிச்செல்வம் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் இன்று மாலை அனைவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு பண்டாரவிளை குளம் சுடலைமாடன் கோவில் படித்துறையில் குளித்தபோது ஏசுபாலன் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரும் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து ஊர்மக்கள் சடலத்தை மீட்டுள்ளனர். இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
CATEGORIES மாவட்டம்