
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலயத்தில் விபிஎஸ் விடுமுறை பள்ளி வாரவிழா கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம், புனித லூர்து அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் மே மாதம் முதல் வாரம் விபிஎஸ் வாரவிழா கொண்டாடப்படும். இந்நிலையில் கடந்த 29ம் தேதி விடுமுறை பள்ளி VBS வாரவிழா தொடங்கியது. விழாவில் தினமும் ஏழு நாட்களும் விவிலியத்தைபற்றி கற்றுக் கொடுக்கப்பட்டது. பின்னர், சிறுவர், சிறுமிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து விடுமுறை பள்ளி VBS வாரவிழா கடைசி நாளான நேற்று மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி நற்செய்தி நடுவ இயக்குனர்- பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் அருட்பணி. ஸ்டார்வின் தலைமை தாங்கினார், பங்குத்தந்தை ஆன்டனி புரூனோ வாழ்த்துரை வழங்கி விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
முன்னதாக முதலில் இறை வணக்கம், மாணவ- மாணவிகளின் விவிலிய பவனி, விவிலிய அஞ்சலி, இறை வார்த்தைகள், அறிக்கை சமர்ப்பித்தல், தலைவர் உரை, நடனம் மற்றும் பரிசுகள் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில். குழந்தைகள், மாணவ- மாணவிகள், இறைமக்கள் ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாட்டினை விபிஎஸ் மறைக்கல்வி பணிக்குழு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.