
தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா- மேயர் ஜெகன் பெரியசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது. செல்வ விநாயகபுரம் நந்தகோபாலபுரம் கோவில் கொடை விழாவை முன்னிட்டு கடந்த 30ம் தேதி கால்நாட்டு விழா நடைபெற்றது.
கொடைவிழாவை முன்னிட்டு தினமும் இரவு அம்மனுக்கு அலங்காரபூஜை பஜனையுடன் நடைபெற்று மாகாப்பு பூஜையும் மாலை தீர்த்தவாரி செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து இரவு திருவிளக்கு பூஜையும் நடைபெற்று அதனை தொடர்ந்து செவ்வாய்கிழமை காலை அபிஷேகபூஜை, அலங்கார பூஜையுடன் மதியக் கொடை நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
கோவில் கொடைவிழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா ராஜாபெரியசாமி, உதவி தர்மகர்த்தா ஆறுமுகச்சாமி, காரியதரிசி முனியசாமி, பொருளாளர்கள் ரவீந்திரன், காமராஜ், கணக்கர் தெய்வேந்திரன், ஆடிட்டர்கள் மாரியப்பன், ஐயாத்துரை, ஆலோசகர்கள் துரைசாமி, சொல்வழங்கு, ஸ்ரீதரன், இளையராஜா, பெரியசாமி, கமிட்டி உறுப்பினர்கள் கணேஷ் காந்தகுமார், அருணகிரி, சிவசுந்தர், பெரியசாமி, கணேசமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர். திமுக மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் பாக்கியத்துரை, போல்பேட்டை பகுதி பிரதிநிதி லிங்கராஜா, முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி, மற்றும் ஜோஸ்பா், சண்முகசுந்தரம், அறிவழகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்