
தூத்துக்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு எண்களை விற்பனை செய்த 2 பேர் கைது
தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தமிழரசன் மற்றும் போலீசார் ஸ்பிக் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் ஓட முயன்றவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர் . அவர்கள் தூத்துக்குடி முக்காணி ரவுண்டானா பகுதியைச் சார்ந்த சரவணகுமார் என்பதும், கார் டிரைவரான இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு எண்களை பேப்பரில் எழுதி வைத்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் இருந்த பணம் ரூ.1530 பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று எம். சவேரியார் புரம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு எண்களை நோட்டில் எழுதி வைத்து விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த யோவான் என்பவரையும் கைது செய்து அவரிடமிருந்து ரூ.500 பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்