தூத்துக்குடி காவல் நிலையம் அருகில் அதிகாலையில் வக்கீல் குமாஸ்தா குத்திக்கொலை

தூத்துக்குடி காவல் நிலையம் அருகில் அதிகாலையில் வக்கீல் குமாஸ்தா குத்திக்கொலை

தூத்துக்குடி குரூஸ்பரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் பால்ராஜ். வக்கீல் குமாஸ்தாவாகவும், தற்போது நில புரோக்கராவும் இருந்து வருகிறார். பால்ராஜ் நேற்றிரவு வீட்டிலிருந்து வெளியே கிளம்பி சென்றுள்ளார். இரவு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை மத்திய பாகம் காவல் நிலையம் அருகே கிரேட் காட்டன் சாலையில் உள்ள ஒரு பேட்டையில் பால்ராஜ் கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல்றிந்த மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பால்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

மேலும், இக்கொலை தொடர்பாக தூத்துக்குடி முத்து கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த கந்தசுப்பிரமணியன் மற்றும் தூத்துக்குடியில் வசித்து வரும் மதுரையை சேர்ந்த ஜெயராம் என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் இவர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பால்ராஜை அரிவாளால் வெட்டி கொலை செய்ததும் தெரிய வந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல் நிலையம் அருகிலேயே கொலை சம்பவம் நடைபெறும் நிலை தூத்துக்குடி மாவட்டத்தில் உருவாகி உள்ளதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கின்றனர். தடுக்க மாவட்ட காவல்துறை விழிப்புடன் செயல்படுமா.?.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )