தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை கல்வி பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களது குடும்பத்தோடு கலந்து கொண்டு தங்களது கல்லூரி பருவ நினைவுகளையும், வாழ்க்கை, பணி சார்ந்த அனுபவங்களை சக நண்பர்களோடு பகிர்ந்து கொண்டனர்.

மேலும், ஆசிரியர்கள் சார்பாக முன்னாள் மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தாங்கள் படித்த பழைய வகுப்பறைகளை நினைவு கூறும் வகையில் பார்த்துச் சென்றனர்.

இதுமட்டுமல்லாது, சிங்கப்பூர், பெங்களூர், சென்னை மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 200-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவியர்கள் தங்களது குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அவர்களது சந்திப்பினை நினைவு கூறும் வகையில் கல்லூரி வளாகத்திற்குள், 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மாணவர்கள் நட்டினர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )