
தூத்துக்குடியில் பெய்த 1 மணி நேர கனமழையால் தண்ணீரில் மூழ்கிய உப்பளங்கள் – உப்பு உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடியில் இன்று அதிகாலை பெய்த கனமழையால் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கி உப்பு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் பிரதான தொழில்களில் ஒன்றானது உப்பள தொழில். சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் இங்கு உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த தொழிலை நம்பி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று (14/05/2024) அதிகாலை சுமார் 1 மணி நேரம் பெய்த கனமழையினால் தூத்துக்குடியில் உள்ள உப்பளங்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கியது. இதனால் உப்பு உற்பத்தி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் உப்பு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி முற்றிலுமாக அழிந்தது. அதன் பிறகு உப்பளங்களை படிப்படியாக மீட்டெடுத்து உப்பு உற்பத்தி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று பெய்த கனமழை காரணமாக மீண்டும் உப்பு உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளதாக உப்பள உரிமையாளர்கள், தொழிலாளர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.