
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூன் 11 முதல் 21ம் தேதி வரை வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜமாபந்தி நடைபெறும்- மாவட்ட ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் 11.06.2024 முதல் 21.06.2024 வரை வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜமாபந்தி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய்த் தீர்வாய அலுவலர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தங்களது கோரிக்கை விண்ணப்பங்களை, அந்தந்த கிராமங்களுக்கு வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாளில், வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
CATEGORIES மாவட்டம்