மதவாதம் பேசாதீர்; தேர்தல் கமிஷன் கண்டிப்பு
தேர்தல் பிரசாரத்தின் போது, மதவாத கருத்துக்களை கூறக் கூடாது’ என, தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு, தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் போது மதம் தொடர்பான விஷயங்களை பேசக் கூடாது. மதவாதத்தை துாண்டும் வகையில், தேர்தல் கூட்டங்களில் பேசப்படுவதாக, நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவிக்கின்றன. தேர்தல் நடக்கும் சமயத்தில், தேர்தல் நடக்காத பகுதியில் இருந்து, சிலர் மதவாத கருத்துக்களை கூறுகின்றனர்.
தகவல் தொழில்நுட்பமும், மின்னணுவியலும் வளர்ந்துள்ள இந்த காலத்தில், எந்தவொரு தகவலும் தேர்தல் நடக்கும் பகுதிகளுக்கு விரைவில் பரவி விடுகிறது. அதனால், பிற வேட்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ‘தேர்தல் பிரசாரத்தில் மதத்தை கலக்கக் கூடாது’ என, சுப்ரீம் கோர்ட்டும் ஏற்கனவே கூறியுள்ளது. எனவே, தேர்தல் சமயத்தில், எந்த பகுதியில் இருந்தும், மதம் தொடர்பான விஷயங்கள் பேசுவதை, அரசியல் தலைவர்கள் தவிர்க்க வேண்டும். நன்றி:தினமலர்