12ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய அனைத்து மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயில உடனுக்குடன் சான்றுகள் வழங்க அனைத்து இ-சேவை மையங்களுக்கும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

12ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய அனைத்து மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயில உடனுக்குடன் சான்றுகள் வழங்க அனைத்து இ-சேவை மையங்களுக்கும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மாணவ, மாணவியர்களை உயர்கல்விக்கு ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தூத்துக்குடி மாணிக்கம் மஹால் மற்றும் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூாயில் 11.05.2024 அன்று மாபெரும் “கல்லூரி கனவு”- உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய அனைத்து மாணவ/மாணவியர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மேற்படி கல்லூரி கனவு நிகழ்ச்சியின் போது மாணவ மாணவியர்களுக்கு அனைத்து வகையான இணையவழி சான்றுகளும் வழங்க வருவாய் துறை மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அங்கு விண்ணப்பித்தவர்களுக்கு அனைத்து சான்றுகளும் உடனுக்குடன் வழங்கப்பட்டது. மேலும் உயர்கல்வியில் சேர தேவைப்படும் அனைத்து இணையவழி சான்றுகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், அனைத்து கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டுவரும் 1312 இ-சேவை மையங்கள் மூலமாக உடனுக்குடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே அனைத்து மாணவ மாணவியர்களும் சம்பந்தப்பட்ட இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து உயர்கல்விக்கு தேவையான சான்றுகளை பெற்றுக்கொள்ளுமாறும், இதில் ஏதேனும் இடையூறு இருக்கும் பட்சத்தில் 08925921306 என்ற ឈប់ ឈ tut.kalloorikanavu2024@gmail.com ញ សំ ប្រ வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்கள்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )