
தூத்துக்குடி மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால்களை சுத்தப்படுத்தி, அகலப்படுத்தும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்
தூத்துக்குடி மாவட்டத்திற்கு 19ம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் விடுக்கப்பட்டதன் காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட சவேரியானா மற்றும் கரிக்களம் காலனி பகுதியில் உள்ள வடிகால்களை கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுத்தப்படுத்தி, அகலப்படுத்தும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி, பகுதி சபா உறுப்பினர் ஆர்தர் மச்சாது, மேயரின் உதவியாளர்கள் ரமேஷ், பிரபாகர், ஜோஸ்பர், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
CATEGORIES மாவட்டம்