
ரூ.12.70 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் நியாய விலைக் கடை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.12.70 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் நியாய விலைக் கடை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபத இன்று (18.05.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் மேலும், கட்டுமானப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (ஆழ்வார்திருநகரி) பாக்கியம் லீலா, சித்தார்த்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
CATEGORIES மாவட்டம்