
தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி பைக்கில் இருந்து வழுக்கி விழுந்ததில் கையில் மாவு கட்டு
தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி பைக்கில் இருந்து வழுக்கி விழுந்ததில் ஔ தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று வழிமறித்து பணம் பறித்து சென்ற ரவுடி உடனடியாக 24 மணிநேரத்தில் கைது செய்து பணத்தை பறித்துவிட்டு, யாரிடமும் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்க இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றபோது கீழே விழுந்த ரவுடியின் வலது கை முறிவு ஏற்பட்டது.
தூத்துக்குடி குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த ஜெபதுரை மகன் மாரிக்குமார் (33) என்பவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கடையின் சரக்கு வாகனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் (18.05.2024) சரக்கு வாகனத்தில் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீங்கான் ஆபீஸ் ஜங்ஷன் அருகில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து, தாக்கி அவரிடமிருந்த பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து மாரிக்குமார் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா , இ.கா.ப மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் சார்பு ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெனோரஸ் மகன் காத்தான் என்ற கார்லின் (24) தனது கூட்டாளியுடன் சேர்ந்து மேற்படி மாரிக்குமாரை தாக்கிவிட்டு, அவரிடமிருந்த ரொக்க பணம் ரூபாய் 9,400/- ஐ பறித்துச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் உடனடியாக 24 மணிநேரத்தில் கார்லினை கைது செய்து, அவரிடமிருந்த பணம் 3160/-யும் பறிமுதல் செய்தனர். பின் அவரிடம் விசாரணை மேற்கொண்டத்தில் பணப்பறிப்பில் ஈடுபட்டதும், அதன் பிறகு அவர்கள் யாரிடமும் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்க தங்களது இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றபோது சாலையிலிருந்த வேகத்தடையில் தடுமாறி சறுக்கி கீழே விழுந்ததில் அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது.