
மேல்நிலைப்பள்ளியில் பவள விழா கொண்டாட்டம்
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளியின் பவள விழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை எவாஞ்சலின் அவர்கள் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் காமராஜர் பள்ளியின் முன்னாள் மாணவருமான அப்துல் வகாப், திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் கே.ஆர் ராஜு திருநெல்வேலி மண்டல சேர்மன் மகேஸ்வரி மாமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன், திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) அழகுராஜன் சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெருமாள், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குழு ஆணைய உறுப்பினரும் பள்ளியின் முன்னாள் மாணவருமான எம்பவர் சங்கர் மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர்கள், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 75வது ஆண்டு பவள விழா கல்வெட்டினை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியினை பள்ளியின் முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னு சாமி மற்றும் முன்னாள் மாணவர் டேனியல் ஆசீர் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அனைவரும் செய்திருந்தனர்.