தூத்துக்குடி மார்க்கெட்டில் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு – ஒருவர் கைது, 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி மார்க்கெட்டில் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு – ஒருவர் கைது, 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி வ உ சி மார்க்கெட்டிற்குள் தங்கவேல் நாடார் மகன் திசைக்கரை என்பவர் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். நேற்று மாலை 5 பேர் கொண்ட கும்பல் திசைக்கரை கடைக்கு எதிரே உள்ள கடைக்கு வந்துள்ளனர்.

அந்தக் கடையில் யாரும் இல்லாததால் திசைக்கரையிடம் கேட்டுள்ளனர். அதன் பிறகு எதிர் கடையில் உள்ள பொருள்களை திருடிச் செல்ல முயன்றுள்ளனர். அதை திசைக்கரை தடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் “இது உன் கடை இல்லை என்றால் எப்படி தடுக்கலாம்” என்று கூறி திசைக்கரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டி உள்ளனர். இதில் காயமடைந்த திசைக்கரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற 5 பேரில் ஒருவரை அங்குள்ள வியாபாரிகள் விரட்டி சென்று மடக்கி பிடித்து மத்திய பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மத்திய பாகம் போலீசார் தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் மார்க்கெட்டுக்குள் வைத்து வியாபாரியை விரட்டி வெட்டிய சம்பவம் வியாபாரிகள் மத்தியில் அச்சத்தையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )