
தூத்துக்குடியில் ரூ2.55 மதிப்பில் புதிய மாநகராட்சி பள்ளி கட்டிடம் – மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு
தூத்துக்குடி திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி மாநகராட்சிக்குட்பட்ட ஜெயலாணி தெரு பகுதி பொதுமக்கள் புதிய குடிநீர் குழாய் அமைத்து தரவேண்டும் என்று வைத்த கோாிக்கையை அடுத்து மாற்றும் பணியை துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.
பணியின் மூலம் தெற்கு புதுத்தெரு மேலூர் பங்காள தெரு பகுதிகளுக்கு சீரான குடிநீர் கிடக்கும். சத்திரம் தெருவில் ரூ 2.55 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் புதிய பள்ளி கட்டிட பணிகளை நேரில் ஆய்வு செய்தரா். திராவிட மாடல் ஆட்சியில் சீறிய மற்றும் முற்போக்கு திட்டங்களினால் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு வருகிறது. மேலும் அதனை கருத்தில்கொண்டு இதுபோன்ற புதிய பள்ளிகளுக்கான கட்டிட பணிகளை மாநகராட்சி பகுதியில் செய்து வருகிறோம் என மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.
லெவிஞ்சிபுரம் பகுதியில் நடைபெற்று வரும் பேவர் பிளாக் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளை பாா்வையிட்டு மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது பொறியாளர் சரவணன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், வட்டச்செயலாளா் ரவீந்திரன், மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மாநகராட்சி குழாய் ஆய்வாளர் செல்வம், மற்றும் பிரபாகர், ஜோஸ்பர், உள்பட பலர் உடனிருந்தனர்.