
தூத்துக்குடியில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு டாக்டா் மகிழ்ஜான் பாிசு வழங்கினார்
தூத்துக்குடி தெர்மல் நகர் மனமகிழ் மன்றம் சார்பாக மறைந்த தெர்மல் நகரைச் சார்ந்த கால்பந்தாட்ட வீரர் கருப்பசாமி நினைவாக நடைபெற்ற மாவட்ட அளவிலான கருப்பசாமி செவன்ஸ் கால்பந்தாட்ட போட்டி 18,19 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.
இந்த போட்டியில் 24 அணிகள் கலந்து கொண்டனர். போட்டியில் முதலாவது பரிசுக்கான கோப்பையை பொன்னுரங்கம் கால்பந்தாட்ட அணியும், இரண்டாவது பரிசுக்கான கோப்பையை கருப்பசாமி நினைவு கால்பந்தாட்ட அணியும், மூன்றாவது பரிசுக்கான கோப்பையை ஏஎஸ்எப்சி அணியும், நான்காவது பரிசுக்கான கோப்பையை சாமி ஜே ஆர் அணியும் கைப்பற்றியது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர் மகிழ் ஜீவன், அனல் மின் நிலைய தலைமை பொறியாளர் ஜஸ்டின் ஜகதீப்குமார், மேற்பார்வை பொறியாளர்கள் சிவக்குமார், கோபால் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.
செயற்பொறியாளர் சின்னையா, முதுநிலை விளையாட்டு அலுவலர் மங்களா. ஜெயபால், கணேசன் மற்றும் முதல் மூன்று கோப்பைகளுக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்கிய லீலா குழுமத்தின் இயக்குனரும் மாவட்ட திமுக பொறியாளர் அணி அமைப்பாளருமான அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை மனமகிழ் மன்ற பொதுச்செயலாளர் ராபின், விளையாட்டு துறை செயலாளர் நேசன் ராபர்ட் கென்னடி, கலைத்துறை செயலாளர் ஜவஹர், மனமகிழ் மன்ற நிர்வாகி சஞ்சய், தெர்மல் நகர் இளைஞர்கள் செய்திருந்தனர்