இரு சக்கர வாகனங்களில் எளிமையாக கியர் மாற்றுவது எப்படி?
தற்போது பெரும்பாலான பைக்குகளில் 4 அல்லது 5 கியர் அதிகபட்சமாக 6 கியர் வரை இருக்கின்றது.
பைக் கியர் மாற்றுவது என்பது பலரும் அறிந்தே ஒன்றே ஆனால் அதனை முறைப்படி பழகி கொள்வதனால் மிக சிறப்பான பைக் ரைடிங் அனுபவத்தை பெற முடியும் அல்லவா ?
அனைத்து மேனுவல் பைக்குகளிலும் பொதுவாக இடது புறத்தில் அமைந்துள்ள கிளட்ச் லிவர் மற்றும் இடது கால் பகுதியில் அமைந்துள்ள கியர் ஷிஃப்டர் கொண்டே கியர்களை மாற்றுவோம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. வலது பக்கம் திராட்டில் மற்றும் முன்பக்க பிரேக் லிவர் கால்பகுதியில் பின்பக்க பிரேக் அமைப்பும் அமைந்திருக்கும்.
கியர் மாற்றும் முறை ?
கியர் மாற்றுவதற்கு முன்னதாக அடிப்படையாக ஒவ்வொரு நிறுவனமும் மாறுபட்ட கியர் ஷிஃப்ட் அமைப்பினை கொண்டிருக்கும் என்பதனால் நியூட்ரல் அதனை தொடர்ந்து முதல் கியர் மற்றும் கியர் எண்ணிக்கை போன்றவற்றை கவனமாக தெரிந்து கொள்வது மிக அவசியமாகும்.
மிக முக்கியமாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் என்னவென்றால் ஓவ்வொரு கியர்களுக்கான சராசரி வேகம் எவ்வளவு இருக்க வேண்டும். எந்த வேகத்தில் எந்த கியர் மாற்றலாம் என்பதனை தெரிந்துகொள்வது நல்ல பலனை தரும்.
கியர் எண்ணிக்கை மற்றும் அமைப்பை தெரிந்த பின்னர் முதல் கியரை மாற்றுவதற்கு முன்னதாக கிளட்ச் லிவரை பிடித்து பின்னர் கியர் மாற்றும்பொழுது படிப்படியாக கியர் எண்ணிக்கையை உயர்த்தி கொள்ள வேண்டும்.
கிளட்ச் லிவரை ரீலிஸ் செய்யும்பொழுது திடீரென அல்லாமல் மிக மெதுவாக ரிலீஸ் செய்து கொண்டே வலதுபக்க கைகளில் உள்ள திராட்டிலை மெதுவாக கொடுக்க தொடங்கினால் பைக் நகரும்.
வேகமாக கிளட்ச் லிவரை விடவோ அல்லது அதிகப்படியான திராட்டிலை கொடுப்பதனை தவிரக்க வேண்டும்.