கழுகுமலை அருகே உள்ள இராமநாதபுரத்தில் ஸ்ரீ வடகாசி அம்மன் கோவில் கொடை விழா மற்றும் அன்னதானம்

கழுகுமலை அருகே உள்ள இராமநாதபுரத்தில் ஸ்ரீ வடகாசி அம்மன் கோவில் கொடை விழா மற்றும் அன்னதானம்

கழுகுமலை அருகே உள்ள இராமநாதபுரத்தில் ஸ்ரீ வடகாசி அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதில் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அன்னதானத்தை துவங்கி வைத்தார்.

கழுகுமலை அருகே உள்ள இராமநாதபுரத்தில் ஸ்ரீ வடகாசி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 14ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவில் கொடை விழாவான நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு மேல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகள் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானத்தை துவங்கி வைத்தார். இதில்
நாட்டாமை கருப்பசாமி, சண்முகசுந்தரம், ரகுராமன், சுந்தர்ராஜ், தர்மர், முனியசாமி, குருநாதன் , நாகராஜ், சதீஷ், கிருஷ்ணம்மாள், தேவி மற்றும் ராஜா புதுக்குடி பால்ராஜ், சதீஷ், கயத்தார் லோகேஷ் குமார், மகேந்திரன் உட்பட ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )