
முதலமைச்சருக்கு பெருமை சேர்க்கும் வகையில் மாநகராட்சி பணிகள் அமையும்- மேயர் ஜெகன் பெரியசாமி
தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மூன்றாம் மைல் அருகிலுள்ள புதுக்குடி பகுதியில் நடைபெற்ற புதிய தார் சாலை பணிகளை மேயர் ஜெகன் பொியசாமி பார்வையிட்டார்.
பின்னர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை அழகுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக மூன்றாவது மைல் புறவழிச்சாலையில் உள்ள பாலத்தில் முடிவுற்ற ஓவியம் வரையும் பணியை பார்வையிட்டார். ஸ்டெர்லைட் சம்பவத்தில் உயிாிழந்தவர்கள் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மேலும் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் மற்றும் போல்பேட்டை கருத்த பாலம் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பாலம் அமைக்கும் பணிகளையும் மேயர் ஜெகன் பார்வையிட்டார்.
பின்னர் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரையிலும் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு அனைத்து பணிகளும் பாரபட்சமின்றி 60வார்டுகளிலும் நடைபெற்று வருகிறது. வளர்ந்து வரும் மாநகரத்தில் உள்ள கட்டமைப்புகளை மேம்படுத்தவும் எதிர்காலத்தில் மிகப்பொிய துறைமுக நகரமாக விளங்க இருப்பதால் விமான நிலையம் விாிவாக்கம் ேபான்ற பணிகளால் இந்தியா மட்டுமின்றி வௌிநாடுகளிலிருந்தும் ஏற்றுமதி இறக்குமதி தொழில் சார்ந்த தொழிலதிபர்கள் பன்னாட்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள் வந்து கொண்டு இருப்பதால் அதற்கேற்றாற் போல் எதிர்கால தலைமுறையினரை ஊக்குப்படுத்தும் வகையிலும் மாநகரில் தூய்மை சுற்றுப்புறங்களை பாதுகாப்பது போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் வகையில் முத்துநகாில் தேவையற்ற இடங்களில் தேவையில்லாத சுவரொட்டிகளை ஒட்டி அழகை சீர்குலைக்கும் நிலை தொடர்கிறது. அதை தடுக்கும் வகையில் முத்து மாநகரில் பிரதான மேம்பாலத்தில் சுவர்கள் தூண்களில் உப்பள தொழில், தொழிலாளர்களின் நிலை, மீனவர்களின் நிலை, மீன்பிடி நிலை, உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சுவடுகள் மற்றவர்களுக்கு தொியும் வகையில் அதில் வரையப்பட்டுள்ளது. இதுபோன்று மற்றும் சில இடங்களில் வரையப்படவுள்ளன, இதன் மூலம் தேவையற்ற சுவர் விளம்பரங்கள் எழுதி சர்சையை உருவாக்குவது தடுக்கப்படும். எல்லா வகையிலும் மக்கள் நலன் தான் முக்கியம் என்ற அடிப்படையில் பணிகள் நடைபெறுகின்றன. இதுபோன்ற பணிகள் என்னால் மாநகரம் மேலும் பொலிவுறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றார்.
உடன் மாநகராட்சி உதவி ஆணையர் சேகா், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, கவுன்சிலர் சந்திரபோஸ், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், வட்ட செயலாளர் ரவீந்திரன், பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பா், உள்பட பலர் உடனிருந்தனர்.