
தூத்துக்குடி: பைக் திருடர்கள் இருவர் கைது- ரூ75,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனம் பறிமுதல்
எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்த சண்முகம் சுந்தரம் மகன் கார்த்திக்குமார் (40) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை கடந்த 24.05.2024 அன்று தனது வீட்டின் அருகில் நிறுத்திவிட்டு பின்பு சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கும்போது அவரது இருசக்கர வாகனம் திருடு போயுள்ளது.
இதுகுறித்து கார்த்திக்குமார் அளித்த புகாரின் பேரில் எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி தாளமுத்துநகர், டி. சவேரியார்புரம் பகுதியை சேர்ந்த மாடசாமி மகன் பாஸ்கர் (23) மற்றும் தாளமுத்துநகர், பூபல்ராயர்புரம் சோட்டையன்தோப்பு பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் (24) ஆகியோர் கார்த்திக்குமாரின் இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து எப்போதும்வென்றான் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சந்திரசேகர பாண்டியன் எதிரிகளான பாஸ்கர் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 75,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.