
“கால்நடை பராமரிப்பு மற்றும் தடுப்பூசியின்” முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
ராமநாதபுரம் :மே :23
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மதுரை வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவி ஜே. ஆனி ஹிங்கிஸ்,மானாங்குடி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு விவசாயக் கூட்டம் அமைத்து “கால்நடை பராமரிப்பு மற்றும் தடுப்பூசி வழங்குதலின்” முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்.இந்நிகழ்ச்சியில் கால்நடைகளைத் தாக்கும் நோய்கள் பற்றியும் அவை பரவும் முறைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.
கால் மற்றும் வாய் நோய் (FMD) என்பது பொருளாதார ரீதியாக முக்கியமான தொற்று வைரஸ் நோயாகும், இது கால்நடைகள், செம்மறி ஆடுகள் மற்றும் பன்றிகள் போன்ற கால்நடை இனங்களை பாதிக்கிறது. பொருத்தமான தடுப்பூசிகள் FMD வைரஸ் (FMDV) தொற்றுக்கு எதிராக மருத்துவப் பாதுகாப்பைத் தூண்டும் திறன் கொண்டவை என்பதை பெரும்பாலான ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தடுப்பூசி போடுவதற்கான தகுந்த கால அளவு துண்டுப்பிரசுரம் மூலம் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.