‘எங்கள் பேச்சை யாரும் கேட்பதில்லை’; நீதிபதிகள் ஆதங்கம்
‛எங்கள் பேச்சை யாரும் கேட்பதாக தெரியவில்லை’ என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
காவல் துறையில் சீர்திருத்தங்கள் செய்ய உத்தரவிடக் கோரி, மூத்த வழக்கறிஞரும், பா.ஜ., செய்தித் தொடர்பாளருமான அஸ்வினி குமார் உபாத்யா, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மேலும், இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ஜே.எஸ்.கேஹர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்து விட்டது. அப்போது பேசிய நீதிபதிகள், ‘காவல் துறையில் சீர்திருத்தங்கள் நடக்கின்றன… நடக்கின்றன… நடந்து கொண்டே இருக்கின்றன. எங்கள் பேச்சை யாரும் கேட்பதாக தெரியவில்லை’ என்றனர்.