
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நிறைவு
தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் வைத்து மே 1 முதல் 26 வரை நடைபெற்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பாரா பயிற்சியாளர் விஜயசாரதி சிறப்பு பயிற்சி அளித்தார். பயிற்சி முகாமில் நிறைவு விழா 26ம் தேதி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஜூடூ, செயலாளர் ராஜேஷ், ஆகியோர் பரிசுகள் வழங்கினார்கள்.
அதில் தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்கத்தின் தலைவர் முஹம்மது நசீர் துணைத் தலைவர்கள் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் விஜயராஜ், கான்ஸ்டன்ட் செயலாளர் ஸ்டீபன் துணைச் செயலாளர் ஜெயலட்சுமி பொருளாளர் நீலராஜன் செயற்குழு உறுப்பினர் ரிகானா பர்வீன், அஜீஸ் ஆகியோர் கோடைகால பயிற்சி முகாமினை செய்திருந்தனர்.
பின்னர், தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கும், தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கத்திற்கும் நன்றினை தெரிவித்துக் கொண்டனர்.