
டி20 உலகக்கோப்பை இந்திய அணி வெற்றி பெற வேண்டி இந்திய கிரிக்கெட் இளம் வீரர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு
20 ஓவர் உலகக்கோப்பை இந்திய அணி வெற்றி பெற வேண்டி இந்திய கிரிக்கெட் இளம் வீரர் சாய் சுதர்சன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.
2024 டி20 உலகக்கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸிஸ் அடுத்த மாதம் தொடங்கி நடைபெறுகிறது. இந்தநிலையில்
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரும் தமிழக அணியின் நட்சத்திர வீரருமான சாய் சுதர்சன் உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். உலகக்கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி உலகக்கோப்பையை இந்திய அணி வெற்றி பெற வேண்டி இந்திய கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் சிறப்பு வழிபாடு செய்தார். முகக்கவசம் அணிந்தபடி குடும்பத்துடன் கோவிலுக்கு வந்த அவர் கோவிலில் மூலவர், சண்முகர், தட்சணாமூர்த்தி வள்ளி, தெய்வானை மற்றும் சூரசம்ஹார மூர்த்தி , பெருமாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கோவிலில் மூலவர் சன்னதியில் அமர்ந்து தரிசனம் செய்த அவரை அடையாளம் கண்டுகொண்ட கோவில் அர்ச்சர்களிடம் இந்திய அணி உலகக்கோப்பையை நிச்சயம் வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து கோவிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த அவரிடம் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.