
பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை- தூத்துக்குடி கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர ரோந்து பணி
பிரதமர் மோடி கன்னியாகுமரி வருவதை முன்னிட்டு தூத்துக்குடி கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை கன்னியாகுமரி வருகை தந்து விவேகானந்தர் தியான மண்டபத்தில் தியானம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு தூத்துக்குடி கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படை க்கு சொந்தமான கப்பல்கள் 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இதேபோன்று கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் சிறிய படகுகள் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
CATEGORIES மாவட்டம்