
தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் அஞ்சலகங்களில் பொது சேவை மையம்
தூத்துக்குடி கோட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவைகுண்டம் ஆகிய மூன்று தலைமை அஞ்சல் அலுவலகங்கள் உட்பட அனைத்து துணை அஞ்சலகங்களிலும் CSC என்னும் பொது சேவை மையம் செயல்படுகிறது. இந்த பொது சேவை மையங்களின் மூலம் பொதுமக்கள் பின் வரும் சேவைகளை எளிதாக பெறலாம்.
இதில், மின் கட்டணம் செலுத்துதல், மொபைல் ரீசார்ஜ், லேண்ட்லைன் கட்டணம்/பிராட்பேண்ட் கட்டணம் / DTH ரீசார்ஜ், LIC பாலிசி / பிற தனியார் இன்சூரன்ஸ் பிரீமியம், விமான மற்றும் பேருந்து பயணசீட்டு முன்பதிவு, FASTAG பில் செலுத்துதல், ஜீவன் பிரமான், ஓய்வூதியர் சான்று, பான் கார்டு விண்ணப்பம், பாஸ்போர்ட் விண்ணப்பம், தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS), பயிர் காப்பீட்டு திட்டம் (PMFBY), மற்றும் பல சேவைகளை பெற அஞ்சலகங்களை அணுகி பயனனடயுமாறு முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.