
தூத்துக்குடியில் பள்ளி மாணவன் திடீர் மாயம்
தூத்துக்குடியில் மாயமான பள்ளி மாணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் கோவில் பிள்ளை விலை தெருவில் வசிப்பவர் முகமது முஸ்தபா இவரது மகன் முகமது இர்ஷாத் வயது 15 இவர் காயல்பட்டினம் அரபிக் கல்லூரியில் ஓதும் படிப்பு படித்து வருகிறார்
இவர் கடந்த ரமலான் பண்டிகை விடுமுறைமுன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள தனது வீட்டுக்கு வந்திருந்தார் கடந்த மாதம் 18ஆம் தேதி இவரது தந்தையுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்பு வீடு திரும்பவில்லைஇவர் பள்ளிக்கும் செல்லவில்லை இவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை
இதுகுறித்து அவரது தந்தை முகமது முஸ்தபா தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஆதாம் அலி வழக்குப் பதிவு செய்து மாணவனை தேடி வருகிறார்
CATEGORIES மாவட்டம்