தென் மாவட்டத்தில் உளவியல் ரீதியாக அனைவர் மனதிலும் ஜாதி உள்ளது. இதனை ஒரே நாளில் மாற்ற முடியாது- இயக்குனர் மாரி செல்வராஜ் தூத்துக்குடியில் பேட்டி

தென் மாவட்டத்தில் உளவியல் ரீதியாக அனைவர் மனதிலும் ஜாதி உள்ளது. இதனை ஒரே நாளில் மாற்ற முடியாது- இயக்குனர் மாரி செல்வராஜ் தூத்துக்குடியில் பேட்டி

தூத்துக்குடியில் சினிமா படப்பிடிப்பிற்காக இயக்குனர் மாரி செல்வராஜ் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு இன்று வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தென் மாவட்டத்தில் உளவியல் ரீதியாக அனைவர் மனதிலும் ஜாதி உள்ளது. இதனை ஒரே நாளில் மாற்ற முடியாது. எல்லோரும் ஒன்றாக சேர்ந்து நுனுக்கமாக கலைத்துறை, அரசியல் உள்ளிட்டவைகளின் மூலம் அழுத்தமான வேலையை முன்னெடுக்க வேண்டியுள்ளது. ஒரே நாளில் மாற்ற முடியாது. அப்படி செய்தால் தான் அடுத்த தலைமுறையில் மாற்றம் வரும். புரிதலுக்கு உள்ளாகும்.

தற்போது OTT-யில் படங்கள் வெளியாவது குறித்த கேள்விக்கு, அனைவர் வீட்டிலும் பூஜை அறை உள்ளது. இருந்தபோதிலும் கோவிலுக்கு சென்றுதான் சாமி கும்பிடுகிறார்கள். அதேபோல் அனைவரும் ஒன்றிணைந்து படம் பார்ப்பது திரையரங்கில் தான் அது என்றும் மாறாது என்று அவர் கூறினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )