
தூத்துக்குடியில் பாதாள சாக்கடை பணிகளை மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு செய்தார்
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாநகராட்சிக்குட்பட்ட 60வது வார்டு பகுதிகளிலும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட ஹவுசிங் போர்டு பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை மேயர்ஜெகன் பொியசாமி பார்வையிட்ட பின் கூறுகையில்
கடந்த 2006ம் ஆண்டில் அப்போது திமுக தலைவராகவும் முதலமைச்சராகவும் இருந்த கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாதாளசாக்கடை திட்டத்தை அப்போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த முக.ஸ்டாலின் நேரடி பார்வையில் பாதாள சாக்கடை பணிகள் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வந்து கொண்டிருந்தன. பின்னர் 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் பாதாள சாக்கடை உள்பட பல்ேவறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளாமல் அனைத்தையும் கிடப்பில் போட்டுவிட்டனர். மீண்டும் திமுக ஆட்சி அமைந்தபின் தளபதியார் வழிகாட்டுதலின் படி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தில் நின்று போன பணிகளை மீண்டும் முறையாக 60 வது வார்டு பகுதிகளிலும் முறைப்படுத்தி செயல்படுத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. திமுக ஆட்சிதான் எப்போதும் மக்களுக்கான ஆட்சி ஏனென்றால் கோாிக்கைகளும் அதிகமாக வரும் எங்களுடைய பணிகளும் மக்களுக்காக அதிகம் இருக்கும் எதிர்கால மக்கள் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து சாலை வசதி கால்வாய் வசதி மின்விளக்கு வசதி என அடிப்படை பணிகளை செய்து கொடுத்து தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் சிறந்த மாநகராட்சியாக தூத்துக்குடியை உருவாக்குவது தான் எங்களுடைய லட்சியம் என்ற தொலைநோக்கு பார்வையோடு பணியாற்றுகிறோம். என்று கூறினாா்.
உடன் குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் வான்மதி, மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பா் உள்பட பலர் உடனிருந்தனர்.