
அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா
தூத்துக்குடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் சார்பில் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
.தூத்துக்குடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் சார்பில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மகளிர் மன்ற தலைவி மைதிலி செல்வராஜ் தலைமையில், சார்பதிவாளர் குருசாமி மற்றும் காமாட்சி முருகன் மகளிர் மன்ற செயலாளர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், மகளிர் மன்ற பொருளாளர் சாந்தி சரவணன் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் விஜய சுந்தர் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். முனைவர் ஆசிரியர் முருகன் மகளிர் மன்ற துணைத் தலைவி பத்மநாத ராஜ் மற்றும் கவிஞர் நெடுஞ்சாலை செல்வராஜ் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை எமிலி ஓய்வு பெற்ற ஆசிரியை மாரியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியை தேவி நன்றியுரை ஆற்றினார்.ர. நிகழ்வில் மகளிர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.