
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பள்ளி மாணவ மாணவியருக்கு புத்தகப் பை வழங்கப்பட்டது
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்-ன் 50வது பிறந்தநாள் வரும் 22.06.24 நடைபெறுவதை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று முதற்கட்டமாக 50 குழந்தைகளுக்கு புத்தகப் பை வழங்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்-ன்
50 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஜூன் 1 முதல் 22 ஆம் தேதி வரை பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் 3 செண்ட் பகுதியில் நடைபெற்ற விழாவில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு 50 புத்தக பைகளை வழங்கினார். இதில் கலந்து கொண்ட குழந்தைகளுடன் கேக் வெட்டி அவர்களுக்கு இனிப்பு வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள், கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.