என்னையா கோழி திருடன் சொன்ன.!. பெண்ணை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தவருக்கு 7 ஆண்டுகள் ஆயுள் தண்டனை

என்னையா கோழி திருடன் சொன்ன.!. பெண்ணை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தவருக்கு 7 ஆண்டுகள் ஆயுள் தண்டனை

திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு  பட்டியிலில் கண்ட சாதியினர் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடியினர் மீதான (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு  நீதிமன்ற  (PCR Court) நீதிபதி  கனம் உதய வேலன் 7 வருடங்கள் ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும்  விதித்து  தீர்ப்பு – இவ்வழக்கை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016ம் ஆண்டு, கோழி ஒன்று காணாமல் போனது சம்மந்தமாக யாரோ களவாடி சென்று விட்டார்கள் என்று  காணாமல் போன கோழியின் உரிமையாளரான திருச்செந்தூர் கரம்பவிளை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மனைவி ஜெயா (40) என்பவர் தெருவில் நின்று சத்தம்போட்டுள்ளார், அதை அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் பாண்டி (73) என்பவர் தன்னைத்தான் கோழி திருடியதாக சத்தம்போடுகிறார் என்று நினைத்து ஜெயாவை, இருவரும் வேறு வேறு சமூகத்தினர் என்பதால் மேற்படி எதிரி பாண்டி ஜெயாவை சாதி குறித்து அவதூறாக பேசி அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் பட்டியிலில் கண்ட சாதியினர் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடியினர் மீதான (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் கொலை வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கோபால் புலன் விசாரணை செய்து கடந்த 02.09.2016 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.

இவ்வழக்கின் விசாரணை பட்டியிலில் கண்ட சாதியினர் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடியினர் மீதான (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு  நீதிமன்றத்தில் (PCR Court) நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த கனம் நீதிபதி உதய வேலன் இன்று (06.06.2024) குற்றவாளியான பாண்டி என்பவருக்கு 7 வருடங்கள் ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000ஃ- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கோபால் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்  பூங்குமார் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த காவலர்  ராஜ் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )