
கலைஞர் பிறந்தநாளைெயாட்டி அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடை வழங்கி, பொதுமக்களுக்கு அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
தூத்துக்குடி கலைஞர் 101வது பிறந்தநாளை முன்னிட்டு மாநகர பகுதியான 15வது வார்டு சாா்பில் திரவிய ரத்தினநகர் பகுதியில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட பிரதிநிதியும் கவுன்சிலருமான இசக்கிராஜா தலைமை வகித்தாா்.
கலைஞர் படத்திற்கு மாியாதை செலுத்தி அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு சீருடை வழங்கி பொதுமக்களுக்கு அசைவ விருந்துடன் முட்டை வழங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில்
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகர பகுதி மட்டுமின்றி வடக்கு மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பல பணிகள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து தேசிய அரசியல் கட்சி தலைவருடன் நட்பை ஏற்படுத்தி ஜனாதிபதி மற்றும் பல பிரதமர்களை உருவாக்கிய கலைஞருக்கு நாம் பிறந்தநாள் ெகாண்டாடுவதை நலத்திட்டத்தோடு செய்தால் தான் மக்கள் நன்மை அடைவார்கள் அதை கருத்தில் கொண்டு இதே போல் எல்லா பகுதியிலும் நடைபெற வேண்டும். தொடர்ந்து மக்கள் பணியாற்றி எதிர்வரும் காலங்களில் திமுகவை எதிர்த்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்று அவர்கள் ஓதுங்கி கொள்ளும் காலம் வரவேண்டும். அதற்கேற்றாற் போல் பணியாற்றுங்கள் மக்கள் நலன் தான் நமக்கு முக்கியம் ஓரு கால கட்டத்தில் இந்த பகுதி எப்படி இருந்தது என்று உங்கள் எல்லோருக்கும்தொியும் தற்போது கட்டமைப்பு பணிகளை முழுமையாக உருவாக்கி கொடுத்துள்ளோம். அதற்கு அனைவரும் திமுகவிற்கு துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், கவுன்சிலர்கள் விஜயகுமாா், கண்ணன், பொன்னப்பன், வட்டச்செயலாளர்கள் பொன்பெருமாள், சுரேஷ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, மாநகர ெதாழிலாளர் நல அணி அமைப்பாளா் முருகஇசக்கி, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அன்பழகன், மாநகர இலக்கிய அணி தலைவர் சக்திவேல், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், வட்ட அவைத்தலைவர் பிரம்மசக்தி, துணைச்செயலாளர் ராஜ்குமாா், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், செல்வம், பேச்சிராமன், சோமசுந்தரம், கணேசன், ஞானப்பிரகாசம், நிர்வாகிகள் பொியமேடை கார்த்திக், ராஜா, ஐயப்பன், சீனிவாசன், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.