
தூத்துக்குடி 40வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவுபடி தூத்துக்குடி பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதை சூழற்சி முறையில் எல்லா பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ளுவது மட்டுமின்றி தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்றும் புதிதாக சில பணிகளையும் செய்து தரவேண்டும். என்று அமைச்சர் கீதாஜீவனிடம் போல்பேட்டை அலுவலகத்திலும் வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கத்திலும் பொதுமக்கள் கொடுக்கும் கோாிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டு பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில்
40வது வார்க்குட்பட்ட மரக்குடி தெருவில் கழிவு நீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சாி செய்து தரவேண்டும் என்று வரப்பெற்ற கோாிக்கையை அடுத்து உடனடியாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நோில் ஆய்வு செய்து எதிர்காலத்தில் இதுபோன்ற குறைபாடுகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாாிகளை கேட்டுக்கொண்டது மட்டுமின்றி அப்பகுதிக்குட்பட்ட பொதுமக்களை சந்தித்து தங்களது குறைகள் குறித்து கேட்டறிந்தார்.
மக்களுடன் கலந்துரையாடலில் பேசும் போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் இந்த பகுதிக்கு புதிய திட்டங்கள் குறிப்பாக சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி, செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் எந்த பணியுமே நடைபெறாமல் இருந்ததை நீங்கள் அறிவீர்கள் மக்களுக்காக தொடா்ந்து பணியாற்றும் கட்சி திமுக தான். திமுக ஆட்சிதான் உங்களுக்கு பொற்காலம் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினும் மக்கள் நலன் தான் முக்கியம் என்று கருதி பணியாற்றுகிறார். அவரது வழியில் உங்களது சில கோாிக்கைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக முழுமையாக செய்து கொடுப்பேன், சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பல்வேறு பணிகளை செய்து கொடுப்பேன் என்றும் உத்தரவாதம் அளித்தார்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகா், கவுன்சிலர் ரெக்ஸின், வட்டச்செயலாளர் டென்சிங், திரேஸ்புரம் பகுதி தகவல்தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், பகுதி மகளிா் தொண்டரணி துணை அமைப்பாளர் கமலி, வட்டப்பிரதிநிதி பாஸ்கர், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.