தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற குரூப் 4 தேர்வில் 12,933 பேர் கலந்து கொள்ளவில்லை – மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற குரூப் 4 தேர்வில் 12,933 பேர் கலந்து கொள்ளவில்லை – மாவட்ட ஆட்சியர் தகவல்

தமிழ்நாடு முழுவதும் குரூப்-4 தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு, மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெற்றது. 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களுக்கு 20 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் மூலம் நடத்தப்படும் தொகுதி 4 தேர்வு எழுத வருபவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்த 200 தேர்வு மையங்களில தேர்வு நடைபெற்றது. இத்தேர்வக்கு 58,373 நபர்கள் விண்ணப்பித்திருந்தவர்களில் 45,440 பேர் தேர்வு எழுதினர். 12,933 பேர் தேர்வு எழுத வரவில்லை.

மேலும் மாநகராட்சி படிப்பகம், அறிவுசார் மையங்கள், மாவட்ட நூலகம், நகர்ப்புறம் மற்றும் ஊரக நூலகங்கள் ஆகியவற்றிற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டு அங்கு படிப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )