தூத்துக்குடியில் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த குழந்தைகளை வரவேற்று காலை உணவு அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

தூத்துக்குடியில் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த குழந்தைகளை வரவேற்று காலை உணவு அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

தூத்துக்குடி: தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டு 5ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி பள்ளி குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் காலை உணவுடன் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் டூவிபுரம் மாநகராட்சி தொடக்க பள்ளியில் தொடக்க நாளான இன்று மாணவ மாணவிகளை வரவேற்று காலை உணவாக வென்பொங்கல், சர்க்கரை பொங்கல் மாணவ மாணவிகளுக்கு வழங்கினாா்.

மாநகராட்சி பள்ளிகள் 21, மாவட்டம் முழுவதும் 524 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் மொத்தம் 18 ஆயிரத்து 819 மாணவ – மாணவியர் பயனடைந்தனர்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பள்ளி தலைமை ஆசிாியர் புளோரன்ஸ் நவநீதம், கவுன்சிலர் அதிஷ்டமணி, பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்டச்செயலாளர் செந்தில்குமார், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அன்பழகன், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )