பொதுமக்கள் கடற்கரைக்கும், மீனவர்கள் கடலுக்கும் செல்ல வேண்டாம் – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

பொதுமக்கள் கடற்கரைக்கும், மீனவர்கள் கடலுக்கும் செல்ல வேண்டாம் – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரிய தாழை முதல் வேம்பார் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் இன்று 10.06.2024 மதியம் 12.30 மணி முதல் நாளை 11.06.2024 இரவு 11.30 மணி வரை கடலில் 2.4 மீட்டர் முதல் 2.7 மீட்டர் உயரம் வரை பேரலைகள் எழும்பக்கூடும் எனவும் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை மையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, கடற்கரையை ஒட்டியுள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரையோர கிராமங்களின் கடலின் அருகில் செல்லவோ, கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ளவோ, கடலில் இறங்கி குளிக்கவோ கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், 10.06.2024 முதல் 14.06.2024 வரை மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், கடலோர கிராமங்களை கண்காணித்து எவ்வித அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.


CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )