
மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற கனிமொழி எம்.பி தூத்துக்குடியில் இன்று பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள கனிமொழி எம்.பி தூத்துக்குடியில் நாளை (புதன்கிழமை) பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார் என வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் ஊமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கனிமொழி 5,40,729 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழந்து வெற்றி பெற்றார்.
இதையடுத்து திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள கனிமொழி எம்பிக்கு பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தூத்துக்குடி தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் இருந்து தொடங்குகிறார்.
அதன்படி, நாளை (புதன்கிழமை) மாலை 5 மணி அளவில் தூத்துக்குடி கலைஞர் அரங்கம் புறப்பட்டு தொடர்ந்து டிஎம்சி காலனி சந்திப்பு, கந்தசாமிபுரம் சந்திப்பு, அமெரிக்க ஆஸ்பத்திரி சந்திப்பு, வட்டக்கோவில், கிருஷ்ணராஜபுரம் மெய்ன்ரோடு, எஸ்.எஸ்.மாணிக்கபுரம், மேட்டுப்பட்டி சந்திப்பு, திரேஸ்புரம் சந்திப்பு, கருப்பட்டி சொசைட்டி சந்திப்பு, மட்டக்கடை, 1 மீ கேட் காந்தி சிலை, 2 மீ கேட் போஸ்டிடல், கீழரதவீதி தேரடி சந்திப்பு, பெரிய பள்ளிவாசல் முன்பு, கிளியோபாட்ரா தியேட்டர் அருகில், ஜார்ஜ் ரோடு, பிபிஎம்டி சந்திப்பு, சுமங்கலி திருமண மண்டபம் முன்பு, சிவந்தாகுளம் ரோடு, வி.ஐ. ரோடு சுகம் ஹோட்டல் அருகில், பாலவிநாயகர் கோவில் தெரு, அண்ணா சிலை சந்திப்பு, டூவிபுரம் 3வது தெரு, வீதி மெய்ரோடு, அண்ணாநகர் 7வது தெரு சந்திப்பு வழியாக கே.வி.கே நகரில் நிறைவு செய்கிறார்.
மேற்படி இடங்களில் நடைபெறும் சிறப்பான நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் அந்தந்த பகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகள் கனிமொழி எம்.பிக்கு வரவேற்பு ஏற்பாடுகளை செய்திடவும், இந்திய கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும் கேட்டுக் கொள்கிறேன். மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை மனுவாக எழுதிக் கொடுத்திடவும் கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் கீதாஜீவன் வௌியிட்டுள்ளார்.