ஏரல் பகுதியில் சொத்து பிரச்சனை தொடர்பாக பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

ஏரல் பகுதியில் சொத்து பிரச்சனை தொடர்பாக பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

ஏரல் திருச்செந்தூர் ரோடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் மனைவி செண்பகவல்லி (52) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான பேச்சிமுத்து மகன் வெங்கடேஸ்வரன் (54) என்பவருக்கும் சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று (13.06.2024) செண்பகவல்லி ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்திரம் பகுதி அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வெங்கடேஸ்வரன், செண்பகவல்லியிடம் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து செண்பகவல்லி அளித்த புகாரின் பேரில் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிசாமி வழக்கு பதிவு செய்து வெங்கடேஸ்வரனை கைது செய்தார். மேலும் இதுகுறித்து ஏரல் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )