
தூத்துக்குடி அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தவர் உயிரிழப்பு
தூத்துக்குடி அருகேயுள்ள பேரூரணியைச் சோ்ந்த நாகராஜன் மகன் முனியராமன் (48). உப்பளத் தொழிலாளியான இவா், கடந்த 4ஆம் தேதி பேரூரணி – மங்களகிரி சாலையில் உள்ள பாலத்தில் அமா்ந்திருந்துள்ளார். அப்போது, அவா் எதிா்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தாா். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
CATEGORIES மாவட்டம்