
திருச்செந்தூர் கோயில் காவல் நிலையம் சார்பில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் சார்பாக திருச்செந்தூர் கிரிம்ஸன் ஐ.டி.ஐ.யில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் இருக்க மற்றும் நல்ல பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.
நிகழ்வில் திருச்செந்தூர் கோவில் காவல் ஆய்வாளர் ராமேஸ்வரி, உதவி ஆய்வாளர் ரத்தினவேல் பாண்டியன், தமிழக மாணவர் இயக்கத்தை சேர்ந்த அஜித் மற்றும் வழக்கறிஞர்கள் பிரகாஷ், கார்த்தி சன் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES மாவட்டம்